உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

நம்ம கஷ்டத்தை சொன்னாதான் !

"ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்."
"பையன் என்ன பண்றான்?"
"டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்!"

"ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்! எப்படி?"
"என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!"

"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது, அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க...!"


"பேஷண்ட் : டாக்டர்... என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு இதுக்கு என்ன பண்ணலாம்...?"
"டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்...!"