உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

பம்பிங் பொன்ஸ் (Pumping Sponce )

தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 g
சீனி - 100 g
ஆப்பிள் - 06 பழம்
எண்ணெய் - 1 போத்தல்
ஈஸ்ட் - 1 தே கரண்டி
வனிலா - 2 தே கரண்டி
சுடுதண்ணீர் - தேவையான் அளவு
ஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)
செய்முறை
முதலில் அப்பிளை தோலை  நீக்கி மிஷ்சியில் தண்ணீர் விடாது நன்றாக அரைக்கவும்.    அரைத்தபின்பு ஒரு பாத்திரத்தில் மா, சீனி, ஈஸ்ட், வனிலா,அரைத்த ஆப்பிளையும் சேர்த்துக் குழைத்தல் வேண்டும்.  இட்லி
 பதத்தில் குழைக்க வேண்டும்.  இட்லி
பதம் வராவிட்டால் தேவையாயின் மெல்லிய சுடுதண்ணீர் சேர்த்து பதம் வரும்வரைக் குழைத்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு குழிவான
கரண்டியால் எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரித்த pumping sponce
இன் மேல் இசிங் சுகர்(Icing sugar) =(cake decorations sugar) தூவிப் பரிமாறலாம்.