உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

ஒரே நாளில் ரூ.100 கோடி விநியோகம்


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஒரே நாளில் ரூ.100 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்களார்களுக்கும் அதிமுக சார்பில் ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அதே நேரத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாவிட்டாலும், வீட்டின் உள்ளே பணத்தை வீசிவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. சென்னை மணலி பகுதியில் பட்டியல் போட்டு, கவர்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்து விநியோகித்து வருபவர்களை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். ஒவ்வொரு கவரிலும் சுமார் 6000 இருப்பதாகவும், பட்டியலில் வாக்காளர்கள் பெயர் முழு முகவரியுடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று தொகுதி முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் விநியோகித்திருப்பதாக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஆர்.கே.நகரில் உள்ள பிசியோதெரஃபி மையத்தில் இருந்து 13 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர்.