Showing posts with label அதிரடி. Show all posts
தமிழர்கள் தமிழில் மொழியில் இணையதளங்களை அவசியம் உருவாக்க வேண்டும்

மகிந்தவும் இதுபோல நஞ்சு குடிப்பாரா ?
குரோவோஷியா நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல், நீதிமன்றில் நஞ்சை குடித்து இறந்த விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரோவோஷியா- பொஸ்னியா ஆகிய இடங்களில், பல போர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அன் நாட்டில் இலங்கை போல இன அழிப்பும் இடம்பெற்றது. இதனை முன் நின்று நடத்தியவர், சுலோபோடன் என்னும் ராணுவ ஜெனரல்.
72 வயதாகும் இவருக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள ஹேக் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போர் குற்றம் மற்றும் இன அழிப்பு தொடர்பாக இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், இவருக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேன் முறையீடு செய்தார். அந்த விசாரணையின் இறுதி தீர்ப்பு நேற்று வெளியாக இருந்த வேளையில். கையில் சிறிய போத்தல் ஒன்றில் ஒரு வகையான திரவத்தோடு அவர் நீதிமன்றம் வந்திருந்தார்.
பலரும் அது ஏதோ குளிர்பாணம் என எண்ணி இருந்தார்கள். ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நான் போர் குற்றவாளி அல்ல என்று கூறியவாறு அவர் அதனை அருந்தி கீழே விழுந்தார். இதனை பல சர்வதேச TV க்கள் அப்படியே படம் பிடித்துள்ளார்கள். இன் நிலையில் இன்று அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹேக் நீதிமன்றத்தில் , பல வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மகிந்தவுக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும் இலங்கை இந்த சட்ட முறைமையில் கைச்சாத்திடவில்லை. இதனால் மகிந்தவை நீதிமன்றம் இழுப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இருப்பினும் ஒரு நாள் மகிந்தவுக்கும் இன் நிலை தான் தோன்றும்.

ஒற்றையாட்சியா? சமஷ்டியா? இணைப்பாட்சியா?
இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள், மக்களால் புனரமைக்கப்படுகின்றன. இதுவரைகாலமும், இறந்தவர்களை நினைவுகூரும் அடிப்படை மனித உரிமைகூட இலங்கையில் மறுக்கப்பட்டு வந்தன. இப்போது இது அனுமதிக்கப்படுவதால், நல்லிணக்கத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரேயடியாக பாராட்டிவிட முடியாது. காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும், நிலத்தை இராணுவத்திடம் இழந்த மக்களும் இன்னமும் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
நீண்டகாலச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைகுறித்து, இந்த நல்லாட்சி (?) அரசு வேண்டாவெறுப்புடனே நடந்து கொள்கிறது.
‘ ஏதோ சட்டத் சிக்கல் இருக்கிறது, சட்டமா அதிபர் திணைக்களம் பதில் சொல்ல வேண்டும், ரணிலோடு பேசுகிறோம், மைத்திரியோடு தனிப்பட்ட சந்திப்புக்களை மேற்கொள்கிறோம்’ என்றவாறு தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்து செல்கிறார்கள்.
சிறைக்கைதிகளை சனாதிபதி விடுதலை செய்யும் நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் அரங்கேறுகிறது.
இந்த விவகாரத்தில் மட்டும் நல்லாட்சி அதிகாரவாசிகளுக்கு என்ன பிரச்சினை?.
எதுவித நிபந்தனையுமின்றி, மேற்குலக- இந்திய பிராந்திய நலனிற்கு இசைவாக, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிமாற்றத்திற்கு உதவிய தமிழ் அரசியல் தலைமைகளால், அரசியல் கைதிகளை விடுவிக்கமுடியவில்லை என்பது பெருங்கொடுமை.
கூட்டமைப்பிற்குள் இருக்கும் உள்முரண்பாடுகளை தீர்ப்பதில், கோஷ்டி பிரிப்பதில் செலவிடும் பெரும்பகுதி நேரத்தை, மக்கள் முகங்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒதுக்கினால் என்ன என்பதுதான் வெகுமக்களின் கேள்வி.
அடிப்படைப்பிரச்சினைகளிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்கு உள்கட்சி விவகாரம் மற்றும் இடைக்கால அரசியல் யாப்பு முன்மொழிவு என்பன பூதாகரமாக்கப்படுகின்றன.
ஆட்சிமாற்றம் என்பது யுத்தவடுக்களை சுமந்துநிற்கும் மக்களின் வாழ்வில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.
பிணைமுறி விவகார திரைக்குள் , எகிறிவரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த உண்மைகள் மறைக்கப்படுகின்றன.
இது பற்றியதான ஆழமான பார்வையை, சரியான புள்ளிவிபரங்களோடு அடுத்த பதிவுகளில் முன்வைப்போம்.
தற்போது உத்தேச அரசியல் யாப்பு குறித்தே சமூகவலைத்தளங்களிலும், அச்சு ஊடககங்களிலும் பரவலாகப் பேசப்படுகிறது.
‘ அது வரும் ஆனா வராது’ என்பதுபோல்தான் தமிழ் தலைவர்களும் தற்காப்பு நிலையெடுத்துப் பேசுகிறார்கள்.
‘ புரட்சி வெடிக்கும்’ என்கிறார் இன்னுமொரு பழந்தலைவர். கார்த்திகை மார்கழி மாதமானால், தையில் ‘போராட்டம் வெடிக்கும்’ என்பார்.
உள்ளூராட்சி தேர்தல் வருவதால், மாவீரர் புகழ்பாடும் புரட்சி கீதங்களும், மாவீரர்தின அழைப்புகளும் அவரிடமிருந்தே வருகின்றன.
மாவீரர் தினம் முடிந்தவுடன், மீண்டும் யாப்புச் செங்கோல் கையிலெடுக்கப்படும்.
ஒரே கூட்டு பல குரல்களில் பேசும்.
சமஸ்டி இல்லாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்பார் ஒருவர்.
வந்தாலும் வரலாம் என்பார் இன்னொருவர்.
எக்கிய ராஜ்யவிற்குள் எல்லாமே ( சமஸ்டி) அடங்கும் என்பார் அரசியல் துறைப் பொறுப்பாளர்.
இந்த ஆரவாரம் தணியும் போது, ‘எக்கிய ராஜ்ய என்றால் ஒருமித்த நாடு, அது ஒற்றையாட்சி என்று அர்த்தப்படாது’என்று பூகோள அரசியல் புது விளக்கம் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
72, 78 இல் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பில், Unitary State , எக்கிய ராஜ்ய, ஒற்றையாட்சி என்றே மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது தமிழில், ஒற்றையாட்சியை ‘ஒருமித்தநாடு’ என்று தன்னிலை விளக்கம் அளிக்கின்றனர் கூட்டமைப்பினர்.
ஆனால் சிங்களச் சொல்லில் எந்த மாற்றமும் இல்லையே..!.
சட்டத் சிக்கல் ஏற்படும்போது, எந்த மொழிச் சொல்லை நீதிமன்றம் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளும்??.
‘எக்கிய ராஜ்ய’ என்கிற சொல்லாடல் ஒருமித்த நாடா? இல்லையா? என்பதற்கு அப்பால், அந்த ஒருமித்தநாட்டில் ஒற்றையாட்சியா? என்பதுதான் இங்கு விவாதத்திற்கூறிய விவகாரமாக இருக்கிறது.
அரசியலமைப்பானது எந்த அரசியல் யாப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.
சகல சட்டமியற்றும் அதிகாரங்களும், நாடாளுமன்றத்திடம் குவிந்திருக்கும் ஒற்றையாட்சியா?, அல்லது இரு தேசங்களின் இறைமையை ஏற்றுக் கொண்ட கூட்டு ஆட்சியா ( confederation) ? அல்லது 2009 ஆகஸ்டில் தமிழ் தலைமையால் முன்வைக்கப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியமா? என்பதனை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
இன்னும் இலகுவாகச் சொல்லப்போனால், ஒருமித்த நாட்டிற்குள் இருக்கும் ஆட்சி முறைமை என்ன?.
தீர்வினை நோக்கிய நேர்மையான உரையாடலில், ‘எக்கிய – ஒருமித்த’ போன்ற திசைதிருப்பல் வாதங்கள் தேவையற்றது.
ஆட்சி முறைமை என்ன?.
இதற்கு விடை சொன்னால் போதும்.

ஆட்டிப்படைக்கும் ஆளுமை.! பிரபாகரன்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று. இத்தகைய நிலையில், கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா உரையாற்றிய போது, வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தொட்டுச் சென்றிருந்தார். அவரது உரையின் முக்கியமான பகுதி அது.
“பிரபாகரனிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிரபாகரன் உருவாகியதால் தான், பீல்ட் மார்ஷல் ஒருவரும் உருவானார்” என்று அவர் கூறியிருந்தார்.
2011ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய, நோர்வேயின், இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜூம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சிறந்த போரியல் வல்லுனர் – இராணுவ மேதை என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஆனாலும், பிரபாகரனின் அரசியல், இராஜதந்திர ஆளுமையை அவர்கள் அந்தளவுக்கு சிறப்பாக மதிப்பிட்டிருக்கவில்லை. எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின், போரியல் ஆளுமை என்பது, எவராலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகவே இருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒன்றும் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டுவதற்காக, பாராளுமன்றத்தில் அந்தக் கருத்தைக் கூறியிருக்கவில்லை. அது பிரபாகரனின் போரியல் ஆளுமையை வெளிப்படுத்தும், அங்கீகரிக்கும் கருத்து என்பதில் சந்தேகமில்லை.
இன்று இலங்கையின் முப்படைகளும் அதிநவீன ஆயுதங்கள், போர்த்தளவாடங்களுடன் இருக்கின்றன என்றால், மூன்று இலட்சம் படையினரைக் கொண்டதாக விளங்குகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் பிரபாகரன் தான்.
அதனால் தான், பிரபாகரனிடம் தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்சேகா கூறியிருந்தார்.
போர் தொடங்கிய போது, வெறும் 10 ஆயிரம் படையினரே இலங்கையில் இருந்தனர். அப்போது எந்த நவீன போர்த் தளவாடங்களும் படையினரிடம் கிடையாது. போருக்கான ஆயத்தநிலையும் இல்லை.
இருந்தாலும், மரபுசார் பயிற்சிகளைப் பெற்ற ஓர் இராணுவம் இருந்தது. அதனை எதிர்கொண்டு தான் பிரபாகரன் தனது போர் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.
பிரபாகரன் எங்கும் போர்க்கலையைக் கற்கவில்லை. எந்த நாட்டிடமும் பயிற்சிகளைப் பெறவில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே, பிரபாகரனிடம் தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அளவுக்கு அவரது போர் ஆளுமை அமைந்திருந்தது.
இலங்கை இராணுவம் இப்போது, உலகில் கவனிக்கத்தக்க ஓர் இராணுவமாக இருக்கிறது என்றால், இலங்கை இராணுவத்திடம் போர் அனுபவங்களையும் நுட்பங்களையும் கற்றுக்கொள்ள பல நாடுகள் முற்படுகின்றன என்றால், அதற்கு ஒரே காரணம், பிரபாகரனின் போர் ஆளுமை மட்டும் தான்.
அந்த ஆளுமையைத் தோற்கடித்த ஒரே காரணத்தினால் தான், இலங்கை இராணுவத்துக்கு இந்த மவுசும் மதிப்பும் கிடைத்தது. வெளியுலக ஆதரவு இல்லாமல் ஒரு படைக்கட்டமைப்பை உருவாக்கி, சர்வதேசத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அதனைக் கட்டியெழுப்பியிருந்தார் பிரபாகரன். பாராளுமன்றத்தில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படையினர் தான் இருந்தனர். இப்போதுள்ள 3 இலட்சம் படையினர் இருந்திருந்தால், இரண்டு ஆண்டுகளில் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருப்போம் என்று கூறியிருக்கிறார்.
இலங்கை இராணுவத்துடன் போரைத் தொடங்கிய போது, விடுதலைப் புலிகளும் ஒன்றும் ஆயிரக்கணக்கான போராளிகளையோ, மிகப்பெரிய ஆயுத தளவாடங்களையோ, நவீன போர்க்கருவிகளையோ, சண்டைப்படகுகள், விமானங்களையோ கொண்டிருக்கவில்லை.
ஐந்து பத்துப் பேரில் இருந்து தான், இராணுவத்துக்கு எதிரான போர் புலிகளால் தொடங்கப்பட்டது. குறைந்தளவு போராளிகளே இருந்தாலும், இராணுவத்தின் செறிவு குறைவாக இருந்தமை, புலிகளுக்குச் சாதகமாக இருந்திருக்கலாம்.
அதனால் தான், இப்போதுள்ள படைப் பலம் இருந்திருந்தால் இரண்டு ஆண்டுகளில் போரை முடித்திருக்கலாம் என்று சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.
எனினும், படைபலம் மாத்திரமே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகொள்வதற்கு சாதகமான அம்சமாக இருந்தது என்ற கருத்து ஏற்புடையதல்ல. மூன்றாவது கட்ட ஈழப்போரில் கூட, இரண்டு இலட்சம் படையினருடன் தான் அரசாங்கம் இருந்தது.
ஆனாலும் புலிகளை அப்போது தோற்கடிப்பதற்கான சூழலும், உத்திகளும் வாய்க்கவில்லை.
பிரபாகரனிடம் இருந்து போரிடும் முறைகளை மாத்திரம் இராணுவம் கற்றுக் கொள்ளவில்லை. பல ஆயுதங்களின் அறிமுகமும் கூட இராணுவத்துக்கு புலிகளால் தான் கிடைத்திருந்தது.
1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி, அச்சுவேலியில் புலிகளின் முகாம் ஒன்றை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். அது ஓர் ஆயுதக் களஞ்சியமாகவும் விளங்கியது. அங்கிருந்து தான், ஆர்.பி.ஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்முதலாக இராணுவத்தின் கையில் கிடைத்தது.
அதற்குப் பின்னர் அதே ஆர்.பி.ஜிகளை பெருமளவில் இராணுவம் வாங்கிக் குவித்தது. அதுபோல பல ஆயுத தளவாடங்களை விடுதலைப் புலிகள் போரில் அறிமுகப்படுத்திய பின்னரே, இராணுவத்தினர் அதனை வாங்க முயன்றனர்.
சாம் எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தான் விமானப்படை வாங்கியது. பல்குழல் பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள் தான் முதன் முதலில் இலங்கையில் பயன்படுத்தத் தொடங்கினர்.

கடற்புலிகளின் தளபதி ஒருவர் உயிருடன்
கடற்புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் சூசைக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவர்களில் சீலன் முக்கியமானவர். அவர் கடற்புலிகளின் பிரதித் தளபதியாக இருந்துள்ளார்.
கடற்படைக்கு எதிரான பல தாக்குதல்களின் போது தலைமை வகித்துள்ள சீலன், கடற்படையின் வள்ளங்கள் பலவற்றை அதிரடித்தாக்குதல் மூலம் மூழ்கடிக்கவும் செய்துள்ளார்.
வன்னி யுத்தத்தின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சீலனும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
ஏனையவர்களைப் போன்று அவரைப்பற்றிய தகவல்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. கடற்படையினரால் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் சீலன் எனப்படும் லோகேஸ்வரன் உயிருடன் இருக்கும் தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள பிரதியமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு சீலன் அண்மையில் நேரில் சென்று கலந்துரையாடல் மேற்கொண்டிருப்பது குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts
(
Atom
)