Showing posts with label தமிழ். Show all posts
சிங்களக் குடியேற்றத்திற்கு முஸ்தீபு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக ஹிபுல் ஓயா என்னும் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் குளங்களை கபளீகரம் செய்து நடைமுறைப்படுத்தவும் மேலும் ஒரு தொகுதி சிங்கள மக்களை அங்கே குடியேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை
கிராமங்களில் மண்கிண்டி மலை, ஆமையன் குளம், முந்திரிகை குளம், சிலோன் தியேட்டர்ஸ் பண்ணை, கென்பண்ணை, வெடிவைத்தகல்லு, மயில் குளம் மற்றும் வவுனியா வடக்கின் சில கிராமங்கள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களாகும். இவை தற்போது சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சூரியனாறு, பெரியாறு போன்ற ஆறுகளை வழிமறித்து ஹிபுல் ஓயா என்னு ம் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இத் திட்டத்திற்காக இராமன் குளம், கொட்டோடைக் குளம், வெள்ளான் குளம், ஒயாமடு குளம் ஆகிய குளங்கள் மூடப்படவுள்ளதுடன் இந்தக் குளங்களின் நீர்ப்பாசனத்தின் ஊடாக செய்கை பண்ணப்பட்ட பெருமளவு வயல் நிலங்களும் கபளீகரம் செய்யப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு பகுதியின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களையும் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்து அங்கே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வி வசாயம் செய்வதற்கான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக புதிதாக ஒரு தொகுதி சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதையும் இலக்காகக் கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாண சபையின் அமர்வில் விசேட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்;
முல்லைத்தீவில் சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இராமன்குளம், கொட்டோடைக்குளம், வெள்ளான்குளம், ஒயாமடுக்குளம் ஆகிய குளங்கள் மற்றும் அந்தக் குளங்களின் கீழான நீர்ப்பாசனம் பெறும் விவசாய நிலங்களை மூடி மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும்.
இந்தக் காணிகளுக்கான ஆவணங்களை மக்கள் வைத்திருக்கும் நிலையில், மயில்குளம் என்ற தமிழ் மக்களின் பூர்வீக கிராமத்தில் அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காணி ஆவணங்களை வழங்கினார்.
அந்த மயில்குளம் கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களும் இனிமேல் குடியேற்றப்படும் சிங்கள மக்களும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காவே இந்த நீர்ப்பாசனத் திட்டம் தொடங்கப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
மிக வேகமாக பரவிவரும் சிங்களக் குடியேற்றம் இந்தத் திட்டத்தின் ஊடாக மேலும் வலுப்பெற்று மிக குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவ ட்டம் சிங்கள மயமாக்கப்படும் அபாயம் உள்ளது.
1948 ஆம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் ஊடாக வட, கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டது. அதனால் 1959 ஆம் ஆண்டு அம்பாறை சிங்களப் பிரதேசமும் 1977 ஆம் ஆண்டு சேருவில சிங்களப் பிரதேசமும் உருவாக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக பல சிங்களப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன. இது நல்ல உதாரணம். இதேபோல் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புதிய சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்படும். இலங்கை அரசாங்கம் தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்ட 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 பேரைக் கொண்ட சிங்கள மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியாகவும் செயற்படுகிறது என்றார்.

செல்வாவின் வழியிலேயே சிங்கக்கொடியைப் புறக்கணித்தேன்! – சர்வேஸ்வரன்
சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சிங்கக்கொடியை தமிழ் மக்கள் தமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது என தந்தை செல்வா கூறியிருந்தார். அவரின் வழியிலேயே நான் அதனை ஏற்ற மறுத்தேன் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய அவர் ‘இலங்கையின் தேசியக்கொடியாக வடிவமைக்க்பபட்ட வாளேந்திய சிங்கம் பதிக்கப்பட்ட சிங்கக்கொடி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்ற கொடியாக இருப்பதால், அதனை நாங்கள் தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று 1950 இல் தந்தை செல்வா கூறியிருந்தார்.
அந்த வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டுமன்றி எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பான ஒவ்வொரு பேச்சுக்களின் போதும் அதிகாரப்பகிர்வு தொடர்பாக பேசுகின்ற போது தேசியக்கொடியை மாற்றுகின்ற விடயம் குறித்து பேசப்பட்டுள்ளன.
தேசியக்கொடி என்பது ஒரு பிரச்சினையாகவே இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த 60 ஆண்டுகால வரலாற்றில் எமக்குத் தெரிந்த மிகப்பெரும்பாலான அரசியல் கட்சிகளாக இருந்தாலென்ன,விடுதலைப்போராட்ட இயக்கங்களாக இருந்தாலென்ன, அதற்குப்பின்னர் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலென்ன ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர் தந்தை செல்வாவின் கொள்கையைப் பிரதி பலிக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுவதில்லை என்ற உறுதியான கொள்கையுடனேயே செயற்பட்டு வருகின்றனர்.
அதனால்,அதற்கான எதிர்ப்பையும் காட்டிக்கொண்டிருக்கிறோம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த மேதினக்கூட்டத்தில் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவருக்கருகில் இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சம்பந்தன் தேசியக்கொடியை கையிலே வைத்து ஆட்டுகின்ற படங்கள் பத்திரிகையிலே வெளிவந்தன.
அதனைப்பார்த்த பின்னர் பத்திரிகைகளில் பல்வேறு கண்டனங்களும், மிகக்கடுமையான விமர்சனங்களும் வந்தன. அதேவேளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத தேசியக்கொடியை சம்பந்தர் கையில்வைத்து ஆட்டியதைப்பார்த்து மிகப்பெரிய விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்களுக்குப்பதிலாக அடுத்த நாளே சம்பந்தருடைய சார்பிலே தான் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்று இப்போது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராசா அறிக்கைவிட்டார். ஆகவே அன்று சம்பந்தர் கொடி ஏற்றியது தவறு என்று அறிக்கை விட்டு மன்னிப்பு கோரிய போது அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத சிங்கள இனவாதம் இன்றைக்கு அதனைப் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கின்றது.
மகிந்த ராஜபக்ச இருக்கின்ற போது சிங்கக்கொடியை ஆட்டியது தவறு என்று கூறிய தமிழரசுக்கட்சி இன்று மைத்திரி ஆட்சியில் அந்தக்கொடி ஏற்ற மறுத்தமை தொடர்பில் மௌனம் சாதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த விடயத்தை தூக்கிப்பிடிப்பதன் ஊடாக இந்தப் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளதால்,அரசு மீண்டும் தேசியக்கொடி தொடர்பில் ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது.
இப்போது இருக்கின்ற சிங்களத்தலைவர்கள் சிலர் இது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்று பேசுகின்றனர். அரசியலமைப்பின் மீது நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றோம். அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து விட்டு நாங்கள் அதை மீறுவதாக கூறியிருக்கின்றனர். இது தவறான விடயம் என்று கூறுகிறேன். ஏனெனில் இந்த அரசியலமைப்பின் மீது சத்தியம் செய்து விட்டுத்தான் நாட்டின் ஜனாதிபதியும் வருகிறார். இந்த அரசியலமைப்பை நான் போற்றிப்பாதுகாப்பேன்,அவற்றை நடைமுறைப்படுத்துவேன் என்று தான் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட அனைவருமே சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு வருகின்றனர்.
இந்த அரசியல் யாப்பிலே 13 ஆவது திருத்தத்தில் இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கான பொலிஸ்,காணி அதிகாரங்களை வழங்க மாட்டேன் என்று ஏற்கனவே இருந்த ஜனாதிபதிகளும், இப்போது இருக்கின்ற ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே திரும்பத்திரும்ப கூறிவருகின்றனர். ஆகவே அரசியல் யாப்பிலே கொடுத்திருக்கக்கூடிய பொலிஸ் காணி அதிகாரங்களை நான் நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று சொல்வது அரசியல் யாப்பை மீறுகின்ற ஒரு செயலாக இவர்களுக்குத் தெரியவில்லையா.? ஆகவே இவ்வாறு அவர்கள் பகிரங்கமாகவே அரசியல் யாப்பை மீறுகின்ற போதெல்லாம் வாய் திறக்காதவர்கள் இன்று சிங்கச் சின்னம் பொறித்த கொடி ஏற்றவில்லை என்பதற்கு மட்டும் வாய் திறப்பதென்பது இன்று இருக்கக்கூடிய முக்கியமான அரசியல் விடயங்களில் இருந்து மக்களை திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மகிந்த சமரசிங்க உரையாற்றுகையில், “வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தேசியக்கொடியை ஏற்றாமல் புறக்கணித்திருக்கிறார். ஆகவே நாங்கள் எப்படி அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியும்” என்று கேட்டிருக்கிறார். அவர் அப்படி கேள்வி கேட்கின்ற போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்ற 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாரேனும் அதற்குப்பதில் சொல்லவில்லை. அதனுடைய அர்த்தம் என்ன? அவர்கள் அனைவரும் இந்த தேசியக்கொடியை ஏற்றுக்கொண்டு விட்டார்களா? அல்லது தமிழரசுக்கட்சி தந்தை செல்வா என்று சொல்லிக்கொண்டு செல்வாவின் கொள்கைகளை குழி தோண்டிப்புதைத்து விட்டதா?
இன்றைய ஊடகங்களிலே இந்த விடயம் பற்றி சிங்கள அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும் சரி,வெளியிலும் சரி வாய் மூடி மௌனிகளாக இருப்பது இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்விக்கான பதில்களை எங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து பெறவேண்டும் – என்றார்.

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி – இரண்டாம் மொழியாக படிக்கலாம்!
தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், தமிழீழத்தில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் . தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.

தமிழ் உலகின் பழமையான மொழி
’தமிழ்’என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். உலகின் பழமையான மொழிகள் மொத்தம் ஏழு, அதில் மூன்று தான் தற்போது வழக்கில் உள்ளது. அதில் ஒன்று தான் தமிழ்!. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்கிறார்கள். இந்திய நாட்டில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டு பதிவுகளில், அறுபதாயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவைகள் ஆகும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மூலம் எண்களும் எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் கோடிக்கு மேல் குறிப்பிட தனி சொற்கள் கிடையாது. பத்து கோடி, நூறு கோடி என சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் இதை பிரமகற்பம் என சொல்ல முடியும். உலகில் இந்தியா, மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழி இலங்கை நாட்டின் நாடாளுமன்ற மொழியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?
இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே செய்தது'' . இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா?
இராணுவத்தினர் வன்னி நோக்கி மூர்க்கத்தனமாக தாக்கி கொண்டு செல்லும் போது, புலிகள் இரணைமடுக் குளத்தின் அணையை உடைத்து இராணுவத்தினருக்கு பலத்த உயிர் சேதம் ஏற்படுத்தியது; அனைவரும் அறிந்ததே! இதில் பல நாட்டு இராணுவத்தினரும் இறந்தனர் என்பது இரகசிமல்ல, பல இந்திய இராணுவத்தினரும் கொல்லபட்டன்ர். இதனால் கோபம் அடைந்த இந்திய மதிய அரசு யாருமே செய்ய துணியாத ஒரு கிழ்த்தரமான இன அழிப்பை தமிழர் மீது கட்டவிழ்த்து விட்டது. திருகோணமலை கடற்படைத்தளத்தில் வந்திறங்கிய ஒரு தொகுதி இந்திய இராணுவ மருத்துவர்கள் மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவி செய்வதற்காக வந்ததாக சொல்லபட்டது.அதை நம்பி சென்றவர்களின் கைகள்,கால்கள் வெட்டி அகற்றிவிட்டனர். இப்படியாக கணிசமாணவர்களை ஊனமாக்கியது இந்திய இராணுவ மருத்துவர்கள். இவர்கள் உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?(ஒய் திஸ் கொல வெறி?) இப்படியாக பல வகையிலும் தமிழ் இன அழிப்புக்கு துணை நின்றதுடன் போர் குற்ற வழக்கை இலங்கைக்கு உள்ளே நடத்தும் படி சொல்வதுடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பை வற்புறுத்தி வருகின்றது.
புலிகளை ஒழித்து விட்டால் தமிழர்கள் போராட மாட்டார்கள் என கனவு கண்ட சர்வதேசம் புலம் பெயர் தமிழர் எழுற்ச்சியுடன் முன்னெடுக்கும் போராடம் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இந்த எழுற்சியை குறைக்க இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் மறுபடியும் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் வகுக்க தொடங்கிவிட்டனர். அதன் அறிகுறியே அடுக்கடுக்காக இலங்கைக்கு செல்வதும், இலங்கை அரசை எதிர்த்து அறிக்கை விடுவது. உறுதிமொழி. வழங்குவது என தொடர்கிறது . நல்ல உதாரணம் : கொலைஞர் தமிழகத்தில் அரை நாள் உண்ணாவிரதம் என தமிழரை நம்பவைத்து ஏமாற்றியது. தமிழர் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். இதே பாணியில் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் களம் இறங்கியுள்ளது .பல வருடங்களாக நம்பி ஏமாந்தது போதும்.எமக்கு நீதி கிடைக்கும் வரை ஒற்றுமையுடன் மிகுந்த விழிப்பாக போராடுவது ஒவொரு தமிழனின் கைகளில் தங்கியுள்ளது.
ஹ ஹ யார் அந்த சிங்க சொங்?
படத்தை பாருங்கள் பதில் புரியும்
உங்களது ஆயுளை அறிவோம் வாங்க
இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இத்தப் பூமியில் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வேம் என அறியும் ஆவல் அனைத்து மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகிறது. அதனால் தான் அனைத்து சோதிடர்களும் ஆயுளை கணித்து சொல்லுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். நீங்கள் எவ்வளவு காலம் உலகத்தில் வாழ்வீர்கள் என அறிந்து சொல்ல ஒரு தளம் உள்ளது இத்தளத்தில் உங்களது வயது நீங்கள் வசிக்கும் நாடு உங்களுக்குள்ள வியாதிகள் .. என பல கேள்விகள் அனைத்தையும் நீங்கள் நிரப்பி முடித்தவுடன் உங்களது ஆயுளை கணித்து சொல்லும் மேலும் இத்தளத்தில் மின்னஞ்சல் முகவரி இல்லாமல் உங்களது நண்பனுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மற்றும் பல பயனுள்ள தகவல்கள் இத்தளத்தில் காணபடுகிறது ;
முள்ளிவாய்காலில் இருந்து முல்லை பெரியார் அணை வரை
தமிழரை எவரும் எங்கும் என்ன வேண்டும் என்றாலும் செயல்லாம் அதற்கு தமிழரே துணையாக இருப்பர் என்பது 50 ஆண்டு கால போராடம் ஒடுக்கப்பட்ட வரலாறு. உலகில் ஒருபோதும் நடந்து இராத பேரவலம்
முள்ளிவாய்காலில் நிகழ்ந்த பின்னரும் கூட சில தமிழ் தலைவர்கள் சிங்கள அரசுடன் பதவிக்காக ஒட்டி வாழ்கின்றனர்.. தங்களை தமிழரின் காவலர் என காட்டிகொள்ளும் சில தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் உணர்ச்சி ததும்ப பேசுவதும் பின்னர் கொழும்பில் சிங்கள அரசுடன் இரகசிய நட்பை பேணிவருவதும் தமிழ் ஈழ தமிழரின் கசப்பான வரலாறு. தமிழ் ஈழ தமிழர் வகை தொகை இன்றி கொலைசெய்யபட்டபோது முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை கிளர்ந்து எழுந்தபோது எழுற்ச்சியை அடக்கிய குர்ந்னநிதி போன்றவர்களை தமிழர் நம்பலாம். உலக தலைவர்கள் எம் தமிழ் தலைவர்களை நன்றாக அறிந்து வைதுருக்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த உண்மை DAM 999திரைப்பட தயாரிப்பாளர் மிக சரியாக புரிந்து வைத்துருக்கிறார். ஒரு தண்ணிர் பிரச்சனையை வைத்து திரைப்படம் தயாரித்து ஒரு மாநிலத்தை திரட்ட முடியும் என்றால் ஈழ தமிழர் கொத்து கொத்தாக கொலை செய்யபட்டபோது ஒரு திரைப்படம் தயாரித்து தமிழகத்தை திரட்ட முடியாமல் போனது எனோ? உச்சி தன்னை முகந்தால் திரைப்படம் திரைக்கு வந்தால் தமிழகத்தை தட்டி எழுப்பி விடுமோ! என்ற மதிய அரசின் பயம் காரணமாக தமிழகத்தின் கவனத்தை திசை திருப்ப நீண்டகால முல்லை பெரியார் அணை விவகாரத்தை தொடக்கிவிட்டுள்ளது. மத்திய அரசு முல்லை பெரியார் அணை விவகாரத்தின் வெற்றி ஆனது தமிழ் கட்சிகள் தமது கருத்து
முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம் வெற்றியும் பெறலாம் இது இனியாவது சாத்தியப்படுமா ? இல்லை
முள்ளிவாய்காலில் நிகழ்ந்த பின்னரும் கூட சில தமிழ் தலைவர்கள் சிங்கள அரசுடன் பதவிக்காக ஒட்டி வாழ்கின்றனர்.. தங்களை தமிழரின் காவலர் என காட்டிகொள்ளும் சில தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் உணர்ச்சி ததும்ப பேசுவதும் பின்னர் கொழும்பில் சிங்கள அரசுடன் இரகசிய நட்பை பேணிவருவதும் தமிழ் ஈழ தமிழரின் கசப்பான வரலாறு. தமிழ் ஈழ தமிழர் வகை தொகை இன்றி கொலைசெய்யபட்டபோது முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை கிளர்ந்து எழுந்தபோது எழுற்ச்சியை அடக்கிய குர்ந்னநிதி போன்றவர்களை தமிழர் நம்பலாம். உலக தலைவர்கள் எம் தமிழ் தலைவர்களை நன்றாக அறிந்து வைதுருக்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த உண்மை DAM 999திரைப்பட தயாரிப்பாளர் மிக சரியாக புரிந்து வைத்துருக்கிறார். ஒரு தண்ணிர் பிரச்சனையை வைத்து திரைப்படம் தயாரித்து ஒரு மாநிலத்தை திரட்ட முடியும் என்றால் ஈழ தமிழர் கொத்து கொத்தாக கொலை செய்யபட்டபோது ஒரு திரைப்படம் தயாரித்து தமிழகத்தை திரட்ட முடியாமல் போனது எனோ? உச்சி தன்னை முகந்தால் திரைப்படம் திரைக்கு வந்தால் தமிழகத்தை தட்டி எழுப்பி விடுமோ! என்ற மதிய அரசின் பயம் காரணமாக தமிழகத்தின் கவனத்தை திசை திருப்ப நீண்டகால முல்லை பெரியார் அணை விவகாரத்தை தொடக்கிவிட்டுள்ளது. மத்திய அரசு முல்லை பெரியார் அணை விவகாரத்தின் வெற்றி ஆனது தமிழ் கட்சிகள் தமது கருத்து முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம் வெற்றியும் பெறலாம் இது இனியாவது சாத்தியப்படுமா ? இல்லை
((தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் )) தந்தை செல்வா
Subscribe to:
Posts
(
Atom
)