Showing posts with label தமிழ் தேசிய. Show all posts
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ, அதையே சம்பந்தன் செய்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டு உள்ள இனப்பிரச்சனையை தீர்ப்பதுக்கு என்னுடன் பேச வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பல முறை அழைப்பு விடுத்து இருந்தேன். அவர்களும் வருகின்றோம், வருகின்றோம் என கூறி இறுதிவரை வரவில்லை. எதிர்க்கட்சியாக உள்ளதென கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. அரசின் பங்காளி கட்சியாகவே செயற்படுகின்றது” என தெரிவித்தார்

சுயநலமே அரசியல் பிளவுகளை சரி செய்யும் என்கிறார் விக்கி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுகள் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டைத் தௌிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் – “ சுய நலம் மேலோங்கும் போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்தப் பிளவுகளைச் சரி செய்யவும் உதவும்.

1949ல் கொள்கை நிமித்தம் தந்தை செல்வா தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்தார். யுத்தம் முடிவடையும் தறுவாயில் சுயநலங் காரணமாக பிரபாகரனை விட்டு சிலர் வெளியேறினர். ஆகவே, பிளவுகள் கொள்கை நிமித்தமும் ஏற்படக் கூடும், சுயநல காரணங்களுக்காகவும் ஏற்படலாம்.
இன்றைய பிளவு நிலை எவ்வாறு ஏற்பட்டதென்பதை நீங்களே ஆய்தறிந்து கொள்ளுங்கள். அது அரசியல் அவதானியரின் வேலை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது மக்களின் நெடுங்கால பாதுகாப்பிற்கும் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாற்றி, யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என, அவர் கூறியுள்ளார்.

Subscribe to:
Posts
(
Atom
)