உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label மரணத்தில். Show all posts

வைகோவுடன் 35 சிங்களவர்கள் தகராறு!


ஜெனிவா: ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் வைகோ இன்று இருமுறை பேசினார். அப்போது இலங்கையைச் சேர்ந்த 35 சிங்களவர்கள் வைகோவை சூழ்ந்துகொண்டு தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11ஆம் தேதி முதல், வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வைகோ ஜெனிவா சென்றுள்ளார். கடந்த 18ஆம் தேதிமுதல் வைகோ தனது கருத்தை முன்வைத்து பேசி வருகிறார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் பொதுச்செயலாளர் வைகோ இன்று இரண்டு முறை பேசினார். வைகோவின் உரை இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலை போர்க்குற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் கவுன்சில் இலங்கை அரசுக்கு 2012 ஆம் ஆண்டில் இருந்து, பல பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், எந்தப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை 1,46,000 தமிழர்கள் படுகொலை தமிழர்களாகிய நாங்கள் மிகவும் வேதனைப்படுவது யாதெனில், ஆறு மாத காலத்தில் அதிலும் 2009 மே மாதம் வரையில் 1,46,000 தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா.மன்றம் தவறி விட்டது. தமிழ் பெண்கள் துயரம் இன்னும் வேதனையானது என்னவென்றால், தற்போது தமிழ் இனக் கலாச்சாரப் படுகொலை உட்பட, கட்டமைக்கப்பட்ட படுகொலை சிங்கள அரசால் நடத்தப்படுகின்றது. தமிழ்ப்பெண்கள், குறிப்பாக, 90000 போர்க்கால விதவைகள் கதறுகிறார்கள். பெண்கள் காணாமல் போன தங்கள் கணவன்,தந்தை,பிள்ளைகளைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காமல், துயரத்தில் வாடுகிறார்கள். நடவடிக்கை தேவை தமிழ் ஈழப் பகுதியில் இருந்து இலங்கை அரசின் இராணுவத்தை முற்றாக வெளியேற்ற மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இனத்தை மொத்தப் பேரழிவில் இருந்து காப்பாற்ற சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் கவுன்சிலும் முன்வர வேண்டும் என்றார். வைகோவின் இரண்டாவது உரை வருகின்ற நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து, அனைத்துலக ஆய்வு நடைபெறப் போகின்றது. முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் தான் நடத்திய இனப்படுகொலைக்குற்றங்களில் இருந்தும், 2015 தீர்மானத்தில் இருந்தும் தப்பித்துக்கொள்ள இலங்கை அரசு தந்திரமான வழிகளைக் கையாள்கின்றது. தமிழர்கள் சித்ரவதை இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், ஊடக நேர்காணல்களில் 2015 தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டியது இல்லை என்றும், போர்க்குற்றங்கள் விசாரணை எதுவும் நடக்காது என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதையும், படுகொலைகளும் சிங்கள இராணுவம், போலீசால் நடத்தப்படுகின்றது. மாணவர்கள் சுட்டுக்கொலை உதாரணமாக 2016 டிசம்பரில் யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் நடராஜன் கஜன், பவுன்ராஜ் சுலக்சன் சிங்களப் போலீசாரால் மிருகத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு சிங்கள இராணுவம் ஆளாக்குகிறது. ஈழத்தமிழ் பெண்கள் கிளிநொச்சியில் கடந்த 210 நாள்களாக ஈழத்தமிழ்ப்பெண்கள் தாய்மார்கள் நீதிகேட்டு தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களின் விம்மல்களையும், அழுகைச் சத்தத்தையும் மனித உரிமைகள் கவுன்சில் செவி கொடுத்துக் கேட்கட்டும். கொடுமையான போது பால சேனா அமைப்பு, சிங்களக் குண்டர்களைக்கொண்ட அமைப்பு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மசூதிகளைத் தாக்குவதோடு, இஸ்லாமிய மக்கள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது. சர்வதேச நீதி விசாரணை ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்கும், நீதி கிடைப்பதற்கும் இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால், மனித உரிமைகள் கவுன்சில் இந்தப் பிரச்சினையை ஐ.நா.வின் பொதுச் சபைக்கு அனுப்புவதோடு, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதற்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும். நேரில் சென்று விசாரிக்க வேண்டும் மனித குலத்திற்கு எதிராக வட கொரியா நடத்திய குற்றங்களை விசாரிக்க என்ன ஏற்பாடுகள் நடந்தனவோ, அதே ஏற்பாடு ஈழத்தமிழர்களுக்கும் நடக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள ஆபத்தான நிலைமையை மனித உரிமைகள் கவுன்சில் ஐ.நா.வின் பொதுச்செயலாளரான மனித உரிமைகள் காவலர் அண்டோனியோ குட்டரெசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் இலங்கைத் தீவுக்குச் சென்று நேரில் பார்வையிட்டுக் கண்காணித்து முடிவு எடுக்க வாய்ப்பு ஏற்படும். சிங்களவர்கள் முற்றுகை இந்த உரையை, குர்திஸ்தான் பிரதிநிதி உட்படப் பலரும் வைகோவுக்குக் கை கொடுத்துப் பாராட்டினர். ஆனால்,உரை முடித்துவிட்டு இரண்டு எட்டு நடப்பதற்குள் சிங்களவர்கள் பலர் வைகோவைச் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண்மணி, நீ இலங்கைப் பிரஜை இல்லையே? நீ இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார். தொப்புக்கொடி ரத்த உறவு உடனே வைகோ பொறுமையாக, நீங்கள் யார்? இலங்கையைச் சேர்ந்தவரா? நீங்கள் சிங்களப் பெண்மணியா? என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி ஆமாம் என்றார். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி இரத்த உறவு இருக்கின்றது. எனக்குப் பேச உரிமை உண்டு என்றார். கொலைகார பாவிகள் அதற்குள் அவரைச் சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள், விடுதலைப்புலிகள் கொடூரமான கொலைகாரர்கள். அக்கிரமக்காரர்கள். அவர்களை ஆதரித்து நீ எப்படிப் பேசலாம்? என்றார்கள். இலட்சக்கணக்கான தமிழர்களை நீங்கள் கொன்றீர்கள். எங்கள் தாய்மார்கள் சகோதரிகளைக் கற்பழித்துக் கொன்றீர்கள் எங்கள் பச்சைக் குழந்தைகளைக் கொன்றீர்கள். நீங்கள் கொலைகாரப் பாவிகள் என்றார். 35 முன்னாள் ராணுவத்தினர் இப்படிச் சூழ்ந்துகொண்டு வைகோவிடம் தகராறு செய்த சிங்களவர்களுள் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர்தான் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அவர்கள் 35 பேர் வந்து இருக்கின்றார்கள். அந்தப்பெண்மணி வைகோவுடன்தகராறு செய்வதை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உள்ளேயே சிலர் வீடியோ எடுத்தார்கள். அவ்வாறு யாரும் அங்கே எடுக்கக் கூடாது. வைகோவின் பாதுகாப்பு பற்றி அச்சம் இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டு வைகோவை மனித உரிமைகள்கவுன்சிலுக்குள்வர விடாமல் தடுக்கச் செய்கின்ற சதி இது . கடந்த வெள்ளிக்கிழமை அன்றே வைகோவை அடையாளம்காட்டிச் சிங்களவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். வைகோவின் பாதுகாப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கவலைப்படுகின்றார்கள்.

தமிழ் இல்லாமல் ஒரு மொழியா..?

இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நிகழும் மாநிலமாக இருப்பது தமிழ்நாடு. ஓரிடத்தில் உரிமை மீறப்படுகிறது என்றால் அங்கே ஒரு போராட்டம் வெடிக்கும். பரிணாம வளர்ச்சியில் உலகிற்கே முன்னோடியான இனம் இது. சம்பிரதாயம் என்ற வார்த்தைக்குள் சயின்ஸை வைத்த பூமி இது. சடங்குகள் வேறு, சம்பிரதாயங்கள் வேறு. மூட நம்பிக்கைகள் சடங்குகள் வரிசையில் வரும். அது இடைச்சொறுகலாக வந்தது. 


ஆனால் தமிழர்களின் பண்பாடு தொன்று தொட்டு வருவது. அறிவியலை தவிர வேறு எந்த பின்னணி காரணங்களும் இருக்காது. இன்றைக்கு இருக்கும் பல உலக மொழிகளுக்கு வேர் மொழியானது தமிழ். காலத்தின் கட்டாயம் நிரூபிக்க பல ஆதாரங்களை தேட வேண்டி இருக்கிறது. தற்போது கொரியா உலகையே எதிர்த்து போராடும் அளவிற்கு தற்சார்பு உடைய நாடாக மாறி இருக்கிறது என்றால், அங்கு தமிழ் கலாச்சாரமும் ஒரு வகையில் வேரூன்றி இருக்கிறது. நம்கிம் எனும் கொரியர் ஏறத்தாழ ஐந்தாயிரம் தமிழ்ச்சொற்கள் கொரிய மொழியில் உள்ளதாக கோவை செம்மொழி மாநாட்டில் தமதாய்வுக் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். 


அவரைத் தமிழ் கற்கத் தூண்டியது எது என்பதை அவரே விளக்குகின்றார். கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக அவர் பணியாற்றுகின்றார். ஒரு நாள் தொடர் வண்டியில் அவர் பயணிக்கும்போது ஒரு தமிழ்க் குடும்பத்தினர் தமிழில் பேசியதைக் கவனித்துள்ளார். அவர்களின் பேச்சில் பல சொற்களின் ஒலிப்புக் கொரிய மொழிச் சொற்களைப் போல இருந்துள்ளன. அவர்களிடம் பேசியபோது அவர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்கள். பிறகுதான் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியுள்ளார்

இந்திய வேதங்களில் இயேசு

 ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா உங்களின் பலவிதமான கேள்விகளுக்கு  பதில் 

உயிர் பறிக்கும் விளை­யாட்­டுக்கள் குறித்து அவர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை வழங்க

உயிர் பறிக்கும் விளை­யாட்­டுக்கள் குறித்து அவர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை வழங்க

இணைய கொலைக்காரன்!! காவு கேட்கும் நீலத்திமிங்கில


இரவில் தனி­யாகப் பேய்ப் படம் பார்ப்­பது, கையில் பிளேடால் வரை­வது, கண்ணை மூடிக்­கொண்டு மிக வேக­மாக சைக்­கிளில் பய­ணிப்­பது என்­ற­வாறு அமைந்­தி­ருக்கும். இறு­தி­யாக நீங்கள் வெற்றி பெறு­வ­தற்­கான கடைசி சவா­லுக்­காக காத்­தி­ருக்­கும்­போது, இறுதி சவால் உங்களை தற்­கொலை செய்துகொள்ளச் சொல்லும்.நீங்கள் தற்­கொலை செய்­து ­கொள்ள முடி­யாது என மறுத்தால், ஆட்­டத்தில் இருந்து விலக முடி­யாது என்­ப­துதான் இதில் இருக்கும் பேரா­பத்து. 2015 ஆம் ஆண்டு முதல் தற்­கொலை நிகழ்ந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனை தொடர்ந்து இன்று வரை உலகில் ஆயி­ரக்­க­ணக்­கான சிறுவர்கள் மற்றும் இளை­ய­வர்­களின் உயிரை தற்­கொலை எனும் வடிவில் காவு கொண்­டுள்­ளது இந்த புளூவேல். இந்த பட்­டி­யலில் எமது அயல் நாடான இந்­தி­யாவும் இணைந்­துள்­ளமை எம்மை கவ­லை­யும் பீதி­யும் அடை­யச்­செய்­துள்­ளது. விளை­யாட்டாக கூட விளை­யாடி பார்க்கக் கூடாத ஒரு விளை­யாட்டு ரஷ்­யாவில் பிறந்து அயல் நாடான இந்­தியா வரை பல உயிர்­களை தற்­கொலை எனும் போர்­வையில் காவு­கொண்­டுள்­ளது புளூவேல். பொது­வாக கணினி விளை­யாட்­டுக்கள் சிறு­வர்­களை முழு­மை­யாக தம் வசம் ஈர்த்து வசி­யப்­ப­டுத்தி விடு­கின்­றன. இதனால் சிறு­வர்கள் கணினி விளை­யாட்­டுக்கு அடி­மை­க­ளாகி கல்விச் செயற்­பாட்டில் இருந்து திசை மாறு­கின்­றனர். அவ்­வாறு இன்று உலகை அச்­சத்­திற்கு உள்­ளாக்கி உள்ள மற்­று­மொரு விளை­யாட்டு புளூவேல். நீலத் திமிங்­கிலம் என தமிழில் அர்த்­தப்­படும் இந்த புளூவேல் கேம், இன்று உலகில் பர­வ­லாக பேசப்­படும், பல­ரது சாபத்திற்குள்ளானதுமான ஒரு விளை­யாட்­டாக மாறி­யுள்­ளது. இந்த சாபத்­திற்கு காரணம் இதை விளை­யா­டு­பவர்­க­ளுக்கு போட்டி முடிவில் கிடைக்கும் பரி­சுதான். பரிசு என்­றதும் அது பணமோ பொருளோ அல்ல உயிர்…! பொது­வாக போட்டி ஒன்றில் வெற்றி பெறு­ப­வ­ருக்­குதான் பரிசு கிடைக்கும். ஆனால் இது விதி­வி­லக்­கா­னது. இந்த போட்­டியில் போட்­டி­யாளர் இறு­தியில் தன் உயிரை போட்டி ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு பரி­ச­ளிக்க வேண்டும். இதுதான் போட்­டியின் விதி. பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முன்னாள் உள­வியல் மாண­வ­ரான ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் புடகின் என்­பவர் இந்த விளை­யாட்டைக் கண்­டு­பி­டித்­துள்ளார்.சமூ­கத்தில் எந்த மதிப்பும் இல்­லாமல் இருப்­ப­வர்­களை தற்­கொலை செய்­ய­வைத்து அதன் மூலம் சமூ­கத்தை “சுத்தம்” செய்­வ­தாக தன் தரப்பு நியாய வாதத்தை முன்­வைத்து பிலிப் இந்த விளை­யாட்டை அறி­முகம் செய்­துள்ளார்.இந்த விளை­யாட்டால் 2015 ஆம் ஆண்டு முதல் தற்­கொலை நிகழ்ந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனை தொடர்ந்து இன்று வரை உலகில் ஆயிரக்­க­ணக்­கான சிறு­வர்கள் மற்றும் இளை­ய­வர்­களின் உயிரை தற்­கொலை எனும் வடிவில் காவு கொண்­டுள்­ளது இந்த புளூவேல். இந்த பட்­டி­யலில் எமது அயல் நாடான இந்­தி­யாவும் இணைந்­துள்­ளமை எம்மை கவ­லை­யும் பீதி­யும் அடை­யச்­செய்­துள்­ளது. போட்­டி­யிட்டால் நாம் ஏன் தற்­கொலை செய்­துகொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்­க­ளுக்குள் எழு­கின்­ற­தல்­லவா? அது தான் புளூவேல் போட்­டியில் உள்ள மாயை. 50 சவால்­களை கொண்­டுள்ள இப் போட்­டியில் சில தம்மைத்தாமே துன்­பு­றுத்­திக்­கொள்ளும் வகை சவால்களையும் உள்­ள­டக்­கி­யது. இறுதி சவால் தற்­கொலை. இவ்­வாறு அபா­ய­க­ர­மான சவால்­களை கொண்ட புளூவேல் என்­பது இணை­யத்தில் குழு­வாக ஆடப்­படும் ஒரு விளை­யாட்டு. இந்த விளை­யாட்டை நாமாக தேடிப் போய் விளை­யாட வேண்­டிய அவ­சியம் இல்லை. உங்கள் உயிரை பறிக்க இது­வா­கவே இணைய வழியில் வந்து உங்கள் வாசல் கதவை தட்டும். அதன் படி இந்த விளை­யாட்டில் உங்­களை இணைத்­துக்­கொள்­வ­தற்­காக முதலில் மின்­னஞ்சல் மூலம் உங்­க­ளுக்கு ஓர் அழைப்பு வரும். அந்த மின்னஞ்சல் அழைப்பில் ‘புளூவேல் சேலஞ்சை எதிர்­கொள்ளத் தயாரா?’ என உங்­களை அழைக்கும். ‘ஆம்’ என்று நீங்கள் பதில் அனுப்­பினால், விளை­யாட்டின் விதி­மு­றை­களை உங்­க­ளுக்கு அனுப்­பு­வார்கள். முதலில் பார்ப்­ப­தற்கு மிக எளி­தான விதி­மு­றை­யா­கவே தோன்றும். இவை எம்மை இந்த விளை­யாட்­டுக்கு உள்­ளீர்க்க விரிக்­கப்­படும் மாய­வலை. அறி­யாமலேனும் இம் மாய வலையில் நீங்கள் சிக்­கி­விட்­டீர்­க­ளாயின் இந்த போட்­டியில் உள்ள 50 சாவால்­களை எதிர்­கொண்டு நீங்கள் செய்து காட்ட வேண்டும். சவாலை நீங்கள் செய்து முடிப்­பதை காணொளி­களாகவோ அல்­லது புகைப்­ப­ட­மா­கவோ எடுத்து அந்தக் குழு­வுக்கு அனுப்ப வேண்டும். இறு­தி­யான சவாலை நீங்கள் எதிர் கொண்டு செய்­து­விட்டால் நீங்கள் வெற்­றி­யாளர். ஆனால் போட்­டியின் இறுதி 50 ஆவது சவாலை செய்த பின்னர் போட்­டியின் வெற்­றி­யா­ள­ராக பெரு­மிதம் அடைய நீங்கள் இவ்­வுலகில் இருக்க மாட்­டீர்கள். காரணம் அதி­ப­யங்­க­ர­மான அந்த இறுதி சவால் தற்­கொலை செய்­து ­கொள்ள வேண்டும் என்­ப­துதான். இறுதி சவாலில் நீங்கள் ஓடவும் முடி­யா­து, ­ஒ­ளி­யவும் முடி­யாது. முதல் கட்ட சவால்கள் மிக எளி­தா­கவே இருக்கும். ஒரு நீலத் திமிங்­கி­லத்தை வரைய வேண்டும், தனி­யாக இரவு பன்­னி­ரெண்டு மணிக்கு மயா­னத்­திற்கு செல்ல வேண்டும், இனிப்­பு­களை அள்ளி வாய் நிறைய சாப்­பிட வேண்டும். இவற்றில் ஒவ்­வொன்­றையும் நீங்கள் செய்து முடிக்க முடிக்க, உங்­க­ளுக்கு பாராட்­டுகள் கிடைக்கும். மெல்ல படி­நி­லைகள் உயர உயர சவால்கள் கடி­ன­மா­கிக்­கொண்டே போகும். அடுத்து வரும் சவால்கள் எம்மை நாமே வதைத்­துக்­கொள்­வது. இதன்படி இரவில் தனி­யாகப் பேய்ப் படம் பார்ப்­பது, கையில் பிளேடால் வரை­வது, கண்ணை மூடிக்­கொண்டு மிக வேக­மாக சைக்­கிளில் பய­ணிப்­பது என்­ற­வாறு அமைந்­தி­ருக்கும். இறு­தி­யாக நீங்கள் வெற்றி பெறு­வ­தற்­கான கடைசி சவா­லுக்­காக காத்­தி­ருக்­கும்­போது, இறுதி சவால் உங்­களை தற்­கொலை செய்­து­கொள்ளச் சொல்லும். நீங்கள் தற்­கொலை செய்­து ­கொள்ள முடி­யாது என மறுத்தால், ஆட்­டத்தில் இருந்து விலக முடி­யாது என்­ப­துதான் இதில் இருக்கும் பேரா­பத்து. இப்­போ­துதான் நாம் அவர்­களின் வலையில் முழு­மை­யாக சிக்­கிக்­கொண்­டுள்­ளதை உணர்வோம். காரணம் ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்­னஞ்சல் தொடர்­பா­டல்­களின் ஊடாக உங்­க­ளுக்கே தெரி­யாமல் உங்கள் கணி­னி­யிலோ அல்லது கைய­டக்க தொலை­பே­சி­யிலோ ‘ட்ரோஜன் வைரஸ்’ எனப்­படும் வைரஸ் அனுப்­பப்­பட்டு, உங்கள் இர­க­சிய தக­வல்கள் அக்­கு­ழுவின் கையில் சிக்கி இருக்கும். இனி நீங்கள் சவாலை ஏற்­க­வில்லை என்றால், உங்கள் இர­க­சிய தக­வல்கள் கசி­ய­வி­டப்­படும் என மிரட்­டு­வார்கள். பெரும்­பா­லான சிறு­வர்கள், இளம் வய­தி­னரை அந்தக் கும்பல் குறி­வைக்­கி­றது. சிறு­வர்கள் விப­ரீதம் தெரி­யாமல் பயந்­துபோய் தற்­கொலை செய்­து­கொள்­கி­றார்கள். ரஷ்­யாவை மைய­மா­கக்­கொண்டு ஆரம்­பித்த இந்த விளை­யாட்டு, இணையம் மூலம் உலகம் முழு­வ­து­மாக சிறு­வர்கள் உட்­பட சுமார் 3000க்கும் அதி­க­மா­ன­வர்­களை தற்­கொ­லைக்குத் தூண்­டி­யுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. கடந்த சில மாதங்­க­ளாக உலகம் முழு­வதும் இந்த விளை­யாட்டு பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் ரஷ்ய அர­சாங்கம் நேர­டி­யாகத் தலை­யிட்டு விசா­ரணை மேற்­கொண்­டது. உலகம் முழு­வதும் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு இந்த விளை­யாட்டை பற்­றிய விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. விளை­யாட்டின் முக்­கிய சூத்தி­ர­தா­ரி­யான இலியா சிட்ரோவ் எனும் 26 வய­து­டைய இளைஞர் கைது செய்­யப்­பட்டார். இதனால் இந்த விளை­யாட்டு குறித்து பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் நிம்­மதி பெரு மூச்­சு­விட்­டனர். இருந்த போதிலும் மும்­பையைச் சேர்ந்த சிறுவன் மன்­பிரீத் சிங்கின் தற்­கொலை, அவன் நண்­பர்­களின் வாக்­கு­மூலம் போன்­றவை மூலம் புளூவேல் விளை­யாட்டு தொடர்பான பீதி மீண்டும் உலகம் முழு­வதும் பரவ ஆரம்­பித்­துள்­ளது. புளூவேல் என்றால் நீல நிறத் திமிங்­கிலம் என்று அர்த்தம். அமெ­ரிக்­காவில் உள்ள ஒரு கடற்­க­ரையில் திமிங்­கி­லங்கள் திடீ­ரென தண்­ணீரை விட்டு வெளியே தாமாக வந்து இறந்­தன. அதைப் பார்க்க திமிங்­கிலங்கள் தாமாகத் தற்­கொலை செய்­து­கொண்­டதைப் போலி­ருந்­தது. இதை அடிப்­ப­டை­யாக வைத்துத் தான் இந்த விப­ரீத விளை­யாட்­டுக்கு புளூவேல் சேலஞ்ச் எனப் பெய­ரிட்­டுள்­ளனர். தற்­கொ­லையைத் தூண்டும் குழுக்கள், தங்கள் உறுப்­பி­னர்­களை தற்­கொ­லைக்குத் தூண்டி, அவர்கள் தற்­கொலை செய்­து­கொள்­வதை நேரலையில் ஒளி­ப­ரப்பி ரசிப்­ப­வர்கள் என இணை­யத்தில் ஆபத்தை விளை­விக்­கக்­கூ­டிய குழுக்கள் அதி­க­மாக உள்­ளன. ஒரு ஆய்­வின்­படி உலகம் முழு­வதும் தற்­கொ­லையைத் தூண்டும் இணை­ய­த்த­ளங்­களின் எண்­ணிக்கை அதி­க­மாகி இருப்­பதும், அதனால் சுமார் 51 சத­வீதம் சிறு­வர்­களின் மரணம் அதி­க­மாகி இருப்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. தொழில்­நுட்ப வளர்ச்சி அதி­க­ரித்துச் செல்ல செல்ல சிறு­வர்கள் உட்­பட எம்­ம­வர்­க­ளுக்கு இணைய பாவ­னை­யா­னது இல­குவில் கிடைக்கும் ஒன்­றாக மாறி­விட்­டது. ஒரு கால­கட்­டத்தில் நகர்­ப்பு­றங்­களில் செல்வம் படைத்­த­வர்­க­ளுக்கு மாத்­திரம் என வரை­ய­றைக்குள் இருந்த இணை­யப்­பா­வ­னை­யா­னது இன்று கிரா­மப்­பு­றங்­களில் வாழ்­ப­வர்­க­ளுக்கும் இல­குவில் கிடைக்கும் நிலைக்கு விருத்­தி­ய­டைந்­துள்­ளது. இதுவரை­ கா­லமும் நாம் சிறு­வர்­களை இணைய பாவ­னையில் இருந்து கட்­டுப்­ப­டுத்தி வைத்­தது இணைய பாவ­னையால் தீய வழிக்கு சென்று விடு­வார்கள் என்ற அச்­சத்­தி­னா­லேயே. ஆனால் தற்­போது சிறு­வர்­களின் உயிரை காப்­பாற்ற அவர்­களை இணையம் பாவிப்­பதை கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய நிலைக்கு இன்­றைய தொழில்­நுட்ப வளர்ச்சி எம்மை ஆட்­டிப்­ப­டைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. எனவே பெற்றோர் தம் பிள்­ளைகள் இணை­யத்தை பயன்­ப­டுத்தும் போது அது குறித்து மிகவும் விழிப்­பு­ணர்­வுடன் இருக்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும். இன்­றைய சிறு­வர்கள் தொழில்­நுட்ப அறிவை மித­மாக கொண்­ட­வர்­க­ளாக உள்­ளனர். இதனால் அவர்­க­ளுக்கு இணைய பாவனை குறித்து நாம் புதி­தாக ஒன்றும் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. பல இணைய விளை­யாட்­டுக்கள் பிள்­ளை­களின் பொழு­துப்­போக்­கிற்கு துணை புரிந்­தாலும் உயிர் பறிக்கும் விளை­யாட்­டுக்கள் குறித்து அவர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை வழங்க வேண்­டி­யது பெற்­றோரின் முக்­கிய கட­மை­யாகும். அண்­மையில் மது­ரையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் புளூவேல் விளை­யாட்­டிற்கு அடிமை­யாகி தன் உயிரை மாய்த்­துக்­கொண்­டுள்ள நிலையில் இவ்­வி­ளை­யாட்டின் ஆதிக்கம் எமது நாட்­டையும் நெருங்கி விட்­டதை எமக்கு பறை­சாற்றுகின்­றது. எனவே நாம் இது குறித்து மேலும் அவ­தா­ன­மாக இருந்து எமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். இணை­யத்தால் இன்று நமக்குப் பல நன்­மைகள் இருந்­தாலும் மெய் உலகைப் பிர­தி­ப­லிக்கும் மெய்­நிகர் உல­கான இணை­யத்­துக்கும் கறுப்பு பக்­கங்கள் உள்­ளன. துடிப்பு,வேகம், கோபம், ஆர்வம், சோகம், தனிமை, மனக் குழப்பம், ஏக்கம் நிறைந்த இளம் ரத்­தங்­களை விபரீதங்­களை நோக்கி இணை­யமும் அழைத்துச் சென்­று­வி­டு­கி­றது. பெற்­றோரின் கவ­னமும். ஆசி­ரி­யர்­களின் பொறுப்பும், நண்­பர்­களின் அக்­க­றை­யும்தான் இளைய சமு­தா­யத்தை காக்கும். இந்த கறுப்புத் தளங்­களை ஒழிக்க எமது சமூகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சிறு­வர்­க­ளுக்கு ஏற்­படும் மன அழுத்தம், மன உளைச்­சலைப் போக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் இணைந்து முன்­னெ­டுப்­பதன் மூலம் சிறு­வர்கள் இவ்­வா­றான விளை­யாட்­டுக்­க­ளுக்கு இரை­யா­காமல் பாது­காத்­துக்­கொள்ள முடியும்.

வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவது ஏன்?


இலங்கையை முழு சிங்கள நாடாக மாற்ற முயற்சிப்பதால் தான் வட-கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைகான துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று முதலமைச்சரின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், வடமாகாணத்தில் சற்று வித்தியாசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், சிங்கள தலைவர்களுக்கு இடர்பாடாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் என அவர் என்னிடம் கூறினார். அத்துடன், சமஷ்டியை முன்வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சமஷ்டி முறை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு முறை. பல நாடுகளில் மக்கள் தம்மை தாமே ஆளும் முறையினைக் கொடுத்துள்ளது. தன்னாட்சியை அந்தந்த பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதனால், அவர்களுக்கு தம்மைத் தாமே பார்த்துக்கொள்ளக் கூடிய நிலை ஏற்படுகின்றது என்றேன். அதற்கு அவர், யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் சமஷ்டி முறை பிரிவினையினை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக் காட்டினார். அதற்கு, பிரிவினைக்கு இடமளிப்பதா இல்லையா என்பது பெரும்பான்மை இன மக்களும் சிறுபான்மை இன மக்களும் எந்தளவிற்கு ஒத்துழைப்புடன் இருக்கின்றார்கள் என்பதில் தான் உள்ளது. பிரிவினைக்காக மக்கள் போராடியதன் காரணம், தமிழ் மக்களை அனைத்து விடயத்திலும் ஒதுக்கி வைக்கப்பட்டமையினாலே தவிர வேறு ஒன்றுமில்லை. எங்களின் வேலைகளை நாங்களே செய்வதற்கு மத்திய அரசாங்கத்தின் உள்ளீடு இல்லாமல், நாம் சுதந்திரமாக செயற்படுவதற்கு ஏதாவது வழியிருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். மாகாணத்திற்கு போதியளவு அதிகாரத்தினைக் கொடுத்தால், போதுமானது தானே. அதுவும் அனைத்து அதிகாரங்களையும் மத்திக்கு வைத்துக்கொண்டு, மாகாணத்திற்கு கொடுத்தால், இதனடிப்படையில் தான் சமஷ்டி கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றேன் என சுட்டிக் காட்டினேன். வடகிழக்கு இணைப்பதற்கு முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் எதிர்க்கின்றார்கள் நீங்கள் மட்டும் ஏன் இணைக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறீர்கள் என அவர் மீண்டும் கேள்வி எழுப்பினார். எனது சிறுவயதில் பார்த்த போது, கிழக்கு மாகாணத்தில் 5 முதல் 10 வீதத்திற்குட்பட்ட சிங்கள மக்களே இருந்தார்கள். தற்போது பார்த்தால், கிழக்கில் 31 வீதமான சிங்கள மக்கள் இருக்கின்றார்கள். பாரம்பரியமாக வடகிழக்கு தமிழ் பேசும் பகுதிகளாக இருந்தும், அந்த இடங்களில் சிங்கள மேலாதிக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, வடக்கிலும் தற்போது இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடகிழக்கினை பிரித்து மேலாதிக்கத்தினை உருவாக்கி, மக்களை பலவிதமான குழப்பங்கள் மற்றும் கலவரங்களின் ஊடாக அவர்களது பிரதேசங்களில் இருந்து வெளியேற்றி, முழுமையாக சிங்கள ஆதிக்கத்தினை உருவாக்க பார்க்கின்றார்களோ என்ற அச்சத்தின் காரணமாக எமது பாதுகாப்பின் நிமித்தம் வடகிழக்கினை இணைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதென்பதனை எடுத்துக் காட்டினேன். அவர் அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.